நாங்கள் செயலில் காட்டுகிறோம் வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் R. குமார்
சென்னை வேளச்சேரி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் R.குமார் சென்னை மாநகராட்சி 13 – வது மண்டலமான வேளச்சேரி மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் பேசியதாவது தமிழக வெற்றி கழகம் சார்பில் என்னை வேளச்சேரி சட்டமன்ற வேட்பாளராக நியமிப்பதற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பொதுச் செயலாளர் பூசி ஆனந்த் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார் பின்னர் அவர் கூறியதாவது வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்றால் இதற்கு முன்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பல்வேறு திட்டப் பணிகளை செய்ய தவறிவிட்டது அதை அனைத்தும் நாங்கள் சொல்லாமலே செய்து முடித்து காட்டுவோம் பின்னர் எதுவாக இருந்தாலும் பேசுவோம்
செயலில் காட்டிவிட்டு பேட்டி தருவோம் என்று தெரிவித்தார் வேளச்சேரி தாலுகா வேட்பாளர் R. குமார்



Post Comment