Loading Now

Breaking

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கோரி ‘VOICE2LAW’ அமைதிப் பேரணி: நடிகை ஷெனம் செட்டி பங்கேற்பு

image-19-1024x768 குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கோரி 'VOICE2LAW' அமைதிப் பேரணி: நடிகை ஷெனம் செட்டி பங்கேற்பு

சென்னை புதுப்பேட்டை எல்ஜி சாலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களையும் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனையை உறுதி செய்யும் வகையில் சட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தி, ‘VOICE2LAW’ (வாய்ஸ் 2 லா) என்ற தலைப்பில் பொது விழிப்புணர்வு அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில் நடிகை ஷெனம் செட்டி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதையே வலியுறுத்தும் நோக்கில் இந்தப் பேரணி நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற மற்றொரு போராட்டத்தில் பங்கேற்றது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தப் போராட்டத்தில் தான் பேசிய விதம் குறித்து சிலர் ஆட்சேபனை தெரிவித்ததாக கூறினார். “இங்கு மற்றவர்கள் எப்படி பேசுகிறார்களோ, அப்படித்தான் நீங்கள் பேச வேண்டும் என்று கூறினர். அதற்கான அனைத்து வீடியோக்களும் என்னிடம் உள்ளன. நான் குற்றச்சாட்டு வைத்ததாக பொய்யாக கூறுகிறார்கள். அதுவே அவர்களது நேர்மையையும் ஜனநாயகத்தையும் காட்டுகிறது” என்று விமர்சித்தார்.

மேலும், “நான் அந்த இடத்திற்கு கல்லூரி மாணவர்களின் போராட்டம் என்ற நம்பிக்கையில்தான் சென்றேன். ஆனால், அங்கு ‘பாஜக முர்தாபாத்’, ‘இந்தியா ஜிந்தாபாத்’ போன்ற இந்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மாணவர்களுக்காகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் நடைபெறும் போராட்டம் என்று கூறப்பட்ட நிலையில், ‘CM விஜய் மிஸ்ஸிங்’ என்ற பதாகைகளும் ஏந்தப்பட்டிருந்தன. மாணவர்களின் உணர்வுகளை பயன்படுத்தி போராட்டத்தை வேறு திசைக்கு திருப்ப முயற்சிக்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது” என்றார்.

தொடர்ந்து, “நீங்கள் என்னை எஜுகேட் செய்யப் போகிறீர்களா? என் கருத்தை மாற்றி, நீங்கள் எதிர்பார்ப்பது போல பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” என்று செய்தியாளர்களிடமும் அவர் கேள்வி எழுப்பினார்.

போராட்டத்தை சிதைக்கும் வகையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், “நான் பேசியதால் அந்த போலி போராட்டம் சிதறியது என்றால், அதுதான் வெற்றி” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்ப முயன்றபோது, “உங்களுடைய பத்து கேள்விகளில் எதற்கு பதில் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. நான் நேற்று அங்கு சென்று அனைவரையும் சந்தித்துவிட்டேன். அதுதான் வெற்றி” என்று ஆவேசமாக பதிலளித்தார்.

மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதாக எழுந்த கேள்விக்கு, “அது தொடர்பாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதை நான் அனுப்பவா? நிரூபிக்கவா?” என்று பதிலளித்தார்.

மேலும், “நேற்று நான் நேரலையில் பார்த்தபோது, அங்கு மாணவர்களை விட வேறு நோக்கத்துடன் செயல்பட்டவர்கள்தான் அதிகமாக இருந்தனர். நான் எந்த அரசியல் கட்சியையும் அல்லது அமைப்பையும் சேர்ந்தவர் அல்ல. மக்களில் ஒருவராகத்தான் இருக்கிறேன்” என்று நடிகை ஷெனம் செட்டி தெரிவித்தார்.

Share this content:

Previous post

திருவொற்றியூரில் தமிழக வெற்றி கழகத்தில் ஆயிரம் பெண்கள் இணைப்பு – நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Next post

மேகமலை மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஆண்டிபட்டி அருகே முழு கடையடைப்பு; அரசாணையை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்

Post Comment

You May Have Missed