Loading Now
பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

பூந்தமல்லி தவெக வேட்பாளர் பாலியல் தொல்லை அளித்ததாக எஸ்.பி. அலுவலகத்தில் மகளிரணி நிர்வாகி புகார்

திருவள்ளூர்: பூந்​தமல்லி சட்​டப்​பேரவை தொகுதி தமிழக வெற்​றிக் கழக வேட்​பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக, அக்​கட்​சி​யின் மகளிர் அணி நிர்​வாகி திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் புகார் அளித்​துள்​ளார்.தமிழக வெற்​றிக் கழகத்​தின் திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட செய​லா​ள​ராக இருப்​பவர் பிர​காசம் என்​கிற குட்​டி. இவரை நேற்று முன் தினம் பூந்​தமல்லி (தனி) தொகு​தி​யின் தமிழக வெற்​றிக் கழக வேட்​பாள​ராக, அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய் அறி​வித்​தார்.இந்​நிலை​யில், பிர​காசம் தனக்கு பாலியல் தனக்கு பாலியல் தொல்லை அளித்​த​தாக, அக்​கட்​சி​யின் மகளிர் அணி நிர்​வாகி நேற்று திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் அளித்​த புகாரில் தெரி​வித்​துள்​ள​தாவது: தமிழக வெற்​றிக் கழகத்​தின் திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட மகளிர் அணி நிர்​வாகி​யாக நான் இருந்து வரு​கிறேன்.இந்​நிலை​யில், கடந்த ஜூன் 8-ம் தேதி திரு​வள்​ளூரில் உள்ள திருமண மண்​டபம் ஒன்​றில் நடந்த எங்​கள் கட்சி நிர்​வாகி​யின் திருமண வரவேற்பு நிகழ்ச்​சி​யில் எங்​கள் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் பங்​கேற்​றார். அந்​நிகழ்​வில் நானும் பங்​கேற்​றேன். அப்​போது, விழா மேடை​யில், எங்​கள் கட்​சி​யின் திரு​வள்​ளூர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் பிர​காசம் அரு​கில் நான் நின்று கொண்​டிருந்​தேன். அப்​போது, பிர​காசம் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்​தார்.இதுகுறித்​து, தட்​டிக்​கேட்ட என் கணவருக்​கும், எனக்​கும் பிர​காசம் கொலை மிரட்​டல் விடுத்​தார். இதுதொடர்​பாக எங்​கள் கட்​சி​யின் தலை​மை​யிடம் புகார் அளித்​துள்​ளேன். ஆனால், அவர் மீது கட்சி தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுக்​க​வில்​லை. ஆகவே, பிர​காசம் மீது வழக்​குப் பதிவு செய்​து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர் புகாரில் தெரி​வித்​துள்​ளார்.இப்புகாரை மறுத்​து, பிர​காசத்தின் மனைவி சுகுணா, மகளிர் அணி நிர்​வாகி​கள் திரு​வள்​ளூர் எஸ்​.பி. அலு​வல​கத்​தில் நேற்று மனு அளித்​தனர்.அதில், “தமிழக வெற்​றிக் கழகத்​தின் மாவட்ட மகளிர் அணி​யின் முக்​கிய நிர்​வாகி பதவியை வாங்கி தரக் கோரி, மகளிர் அணி நிர்​வாகி பிர​காசத்​திடம் பிரச்​சினை செய்து வந்​தார்.அப்​ப​த​வியை வாங்கி தராத​தால் பிர​காசம் மீது அவர் பொய்​யான புகார் தெரி​வித்​துள்​ளார். கட்​சி​யில் உள்ள ஒரு சிலரே பிர​காசத்​துக்கு எதி​ராக அந்த பெண் நிர்​வாகியை தூண்டி விட்​டுள்​ளனர். ஆகவே, பொய்​யான புகார் கொடுத்த பெண் நிர்​வாகி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Share this content:

You May Have Missed