அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்த மனு தாக்கல்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்பரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி மற்றும் பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்தது குறித்து விசாரணை நடத்த வருமான வரித்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரான ஜெயக்குமார், விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதி அதிமுக வேட்பாளரான சி.வி.சண்முகம், மதுரை திருமங்கலம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் தொகுதி அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கமணி, கோவை வடக்கு தொகுதி பா.ஜ. வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக, அந்தந்த தொகுதி வாக்காளர்கள் சார்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.



Post Comment