Loading Now

மதுரையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கணவன் மனைவியாக பங்கேற்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

image-10-1024x466 மதுரையில் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கணவன் மனைவியாக பங்கேற்று சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள வல்லமை அறக்கட்டளை இலவச காவல் பயிற்சி மையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.

இதில் விமான போக்குவரத்து துறையில் டி.ஐ.ஜியாக பணியாற்றி வரும் ரம்யா பாரதி மற்றும் மேற்குவங்க மாநில குறு சிறு மற்றும் நடுதர தொழில் துறை இயக்குனர், சொரோப் உதயகுமார் ஐ.ஏ.எஸ் ஆகியோர் காவல் துறையில் சேர்வதற்காக பயிற்சி பெற்று வரும் ஏழை மாணவ மாணவிகளுடன் பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியில் ஆர்வமாக ஐஏஎஸ் அதிகாரி மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளான இருவரும் பொங்கல் வைத்து மாணவர்களுடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

12 குழுக்களாக பிரிந்து பொங்கல் வைத்ததில் முதலில் பொங்கல் வைத்த குழுவுக்கு பரிசுகளும் பாராட்டுக்களும் கொடுக்கப்பட்டது.

பின்னர் பேசிய சுரப் உதயகுமார் காவல் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவிகளுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.

சொருப் உதயகுமார் ஐ.ஏ.எஸ் அதிகாரி மதுரையை பூர்விகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this content:

Post Comment

You May Have Missed