Loading Now

இஸ்ரேல் பெண் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை

image இஸ்ரேல் பெண் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு மரண தண்டனை

பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹம்பிக்கு கடந்த ஆண்டு மார்ச் 6ம் தேதி சுற்றுலா வந்த இஸ்ரேலைச் சேர்ந்த 26 வயது பெண்ணும் 28 வயதான பெண் சுற்றுலா வழிகாட்டியும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

அதைத் தடுக்க முயன்ற ஒடிசாவை சேர்ந்த சுற்றுலாப் பயணி பிபாஷ் குமார் கொல்லப்பட்டார். இது குறித்து சாய் (27), மல்லேஷ் (26), சரணப்பா (27) ஆகிய 3 பேரை கொப்பல் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, கங்காவதி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 11 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 6ம் தேதி மூவரும் குற்றவாளிகள் என நீதிபதி சதானந்தா நாகப்பா நாயக் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து “கூட்டு பாலியல் வன்கொடுமை, கொலை, திருட்டு ஆகிய குற்றங்களுக்காக மூவருக்கும் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகளின் படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது” என நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்

Share this content:

Post Comment

You May Have Missed