Loading Now
உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

சென்னை ஜார்ஜ் டவுனில் மரியாளையா தொண்டு நிறுவனத்தின் தலைமையில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. “கொடுத்துப் பெறுவோம்” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு மகளிர் தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகளையும் தங்கள் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 1200 மகளிர் குழு பெண்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மேலும், மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, தூய்மை பணியாளர்கள் முதல் அரசுத் துறையில் பணியாற்றும் பல்வேறு துறைகளில் உள்ள பெண்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு கிரீடம் மற்றும் பாராட்டு பட்டயம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பெண்களின் சேவையை பாராட்டும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவராலும் பாராட்டப்பட்டது.

WhatsApp-Image-2026-03-07-at-2.59.45-PM-1024x768 உலக மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது

Share this content:

You May Have Missed