Loading Now

சிங்கம்புணரியில் காளான் உற்பத்தி நிலையத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

IMG-20260211-WA0011-1024x768 சிங்கம்புணரியில் காளான் உற்பத்தி நிலையத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டத்தில் சிற்பி காளான் வளர்த்து வரும் திருமதி கௌதமி அவர்களின் காளான் உற்பத்தி நிலையத்தில், செட்டிநாடு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகளுக்கு நடைமுறை பயிற்சி வழங்கப்பட்டது.இப்பயிற்சியின் போது காளான் படுக்கை தயாரிப்பு முறை, விதைநட்டு பராமரிப்பு, ஈரப்பதம் கட்டுப்பாடு, நோய் தடுப்பு முறைகள் மற்றும் சரியான அறுவடை செய்வது குறித்து விரிவாக விளக்கப்பட்டது. தொழில்முறை காளான் வளர்ப்பில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் பற்றியும் மாணவிகள் கேட்டறிந்தனர்.மேலும், பயிற்சியின் ஒரு பகுதியாக மாணவிகள் தாமாக இணைந்து காளான் வளர்ப்பு படுக்கையை தயார் செய்து செயல்முறை அனுபவம் பெற்றனர். இப்பயிற்சி மாணவிகளுக்கு தொழில் முனைவுத் திறனை மேம்படுத்தவும், சுயதொழில் வாய்ப்புகளை அறியவும் உதவிகரமாக அமைந்தது.

Share this content:

Previous post

வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ₹15,000 மதிப்புள்ள ஸ்பீக்கர் வழங்கல்

Next post

தமிழகம் முழுவதும் மசூதிகளில் நடை பெறும் இரவு நேர சிறப்பு தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு தேவை – முதல்வருக்கு காயல் அப்பாஸ் கோரிக்கை !

Post Comment

You May Have Missed