Loading Now

Breaking

சங்கராபுரத்தில் சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த சகோதரியை மிளகாய் பொடி தூவி கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற அண்ணன்:தடுக்குச் சென்ற தங்கையின் கணவரையும் சரமாரியாக வெட்டி விட்டு கூட்டாளிகளுடன் தப்பிய ஓடிய அண்ணன்:சம்பவ இடத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் விசாரணை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் புதிய பேரூராட்சி அலுவலகம் பகுதியில் வசித்து வருபவர் தீபா இவருக்கும் இவரது சகோதரரான அதே பகுதியில் வசித்து வரும் காந்தகுமாருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில் சங்கராபுரம் நகரப் பகுதியில் உள்ள இவர்களது சொத்து தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தனது தங்கையை கொலை செய்ய திட்டமிட்ட ராஜ் என்கின்ற காந்தகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தீபா வீட்டிற்கு சென்று வழக்கம் போல் சொத்தை கேட்டு மது போதையில் தகராறில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பிடுகிறது, இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது, இந்த வாய் தகராறு ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறிய நிலையில் காந்தகுமார் தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்தூளை தீபாவின் முகத்தில் தூவி தீபாவை சரமாரியாக அரிவாளால் சராமாறியாக வெட்டி உள்ளார்,இதனைக் கண்ட தீபாவின் கணவர் பாபு தடுக்க சென்ற போது அவரையும் சரமாரியாக வெட்டி விட்டு காந்தகுமார் அவரது கூட்டாளிகளுடன் தப்பி ஓடியுள்ளார்,தலை மற்றும் உடம்பு பகுதிகளில் வெட்டியதில் படுகாயம் அடைந்த தீபா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார் மேலும் வெட்டு காயங்களுடன் மயங்கி கிடந்த தீபாவின் கணவர் பாபுவை அக்கம் பக்கதினர் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், தொடர்ந்து இது குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த தீபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய காந்த குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக உடன் பிறந்த தங்கை என கூட பாராமல் அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சங்கராபுரம் மையப்பகுதியில் உள்ள 80 சென்ட் இடத்தை தாய் அம்பிகா தீபாவிற்கு எழுதி வைத்து விட்டதாகவும் தாய் அம்பிகா இறந்து இன்றுடன் எட்டு நாட்கள் கூட ஆகவில்லை எனக் கூறப்படுகிறது, சொத்து சம்பந்தமாக காந்தகுமார் மற்றும் தீபாவிற்கு மீண்டும் வாய் தகராறு ஏற்பட்டதாகவும் இதனை தொடர்ந்து ஏற்கனவே திட்டமிட்டபடி காந்தகுமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தனது சகோதரி தீபாவின் முகத்தில் மிளகாய் தூளை தூவி விட்டு சரமாரியாக வெட்டி கொன்று உள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed