தமிழ்நாட்டின் நகரமயமாகும் பகுதிகளில் பிராமல் ஃபைனான்ஸ் சேவை விரிவாக்கம்;நாட்டில் 1 லட்சம் கோடி AUM-ஐ கடந்தது

சென்னை: ரீட்டெயில் நிதி சேவைகளில் கவனம் செலுத்தும் முன்னணி உயர்நிலை NBFC நிறுவனமான பிராமல் ஃபைனான்ஸ் லிமிடெட், தனது வளர்ச்சிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக ₹1 லட்சம் கோடி மதிப்பிலான நிர்வகிப்பு சொத்துகளை (AUM) கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சாதனை, தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் பிராந்திய மற்றும் நகரமயமாகும் சந்தைகளில் நிறுவனத்தின் வலுவான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.தமிழ்நாடு, பிராமல் ஃபைனான்ஸின் மிகப்பெரிய சந்தையாக தொடர்ந்து உள்ளது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, காஞ்சிபுரம் மற்றும் சேலம் உள்ளிட்ட நகரங்களில் 105 கிளைகளின் ஆதரவுடன், மாநிலத்தில் வலுவான கடன் வழங்கல் நிலவுகிறது. தற்போது வீட்டு கடன், சொத்து மீதான கடன், சிறு தொழில் கடன், டிஜிட்டல் பெர்சனல் லோன் மற்றும் யூஸ்டு கார் லோன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.இது குறித்து பேசிய பிராமல் ஃபைனான்ஸின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜெயராம் ஸ்ரீதரன் கூறியதாவது:“₹1 லட்சம் கோடி AUM-ஐ கடந்தது, எங்கள் வாடிக்கையாளர்கள் எங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு ஆகும். குறிப்பாக வளர்ந்து வரும் மற்றும் நகரமயமாகும் பகுதிகளில் இந்த நம்பிக்கை அதிகமாக உள்ளது. தமிழ்நாடு எங்களுக்கான முக்கியமான வளர்ச்சி சந்தையாக தொடர்ந்து உள்ளது.பெருநகரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் இருந்து வரும் வலுவான தேவை இதற்கு காரணமாகும். எங்களின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் போது, தொழில்நுட்பமும் தரவையும் பயன்படுத்தி, அனைவருக்கும் நம்பகமான கடன் சேவையை கொண்டு செல்ல எங்கள் முயற்சி தொடரும்.” என்று கூறினார்..



Post Comment