Loading Now

வி.ஜி.பி தங்கக் கடற்கரையில் இருந்து 6 திருவள்ளுவர் சிலைகள் மலேசியா செல்கிறது

image-15-1024x528 வி.ஜி.பி தங்கக் கடற்கரையில் இருந்து 6 திருவள்ளுவர் சிலைகள் மலேசியா செல்கிறது

வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம், மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் நிறுவுவதற்காக, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா.கு.சண்முகம் வேண்டுகோளை ஏற்று, 6 திருவள்ளுவர் சிலைகளை கொடையாக வழங்கினார்., திருவள்ளுவர் சிலைகளை வழங்கும் விழா சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி தங்கக் கடற்கரை சந்தோசம் அரங்கில் நடைபெற்றது. வி.ஜி.பி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இதுவரை உலகம் முழுவதும் 191 சிலைகள் வழங்கப் பட்டுள்ளது. இந்த ஆறு சிலைகளுடன் சேர்த்து மொத்தம்.197 சிலைகளாகும். மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான
மல்லை சி.ஏ.சத்யா மலேசிய நாட்டின் ஒளவை க.முருகன், பிரான்ஸ் நாட்டின் விசு, செல்வராஜ், டேனியல், மாமல்லபுரம் நகராட்சி கவுன்சிலர் துர்காசினி மற்றும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Share this content:

Previous post

தடுத்து நிறுத்த இயலாத ஹை – பெர்ஃபார்மென்ஸ் பயணம்:அதிக வளர்ச்சி வேகத்துடன் வருடாந்திர விற்பனையில் சாதனை படைத்திருக்கும் BMW Group India

Next post

பாலியல் புகாரால் தற்கொலை விவகாரம்: கேரளாவில் பெண் கைது

Post Comment

You May Have Missed