Loading Now

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய வாலிபர் உடல் கண்டுபிடிப்பு !

image-14 முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய வாலிபர் உடல் கண்டுபிடிப்பு !

 தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள காஞ்சிமரத்துறை பகுதியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . கூடலூர் கருணாநிதி காலனியைச் சேர்ந்த ஜெயராஜ் அவர்களின் மகன் சதீஷ்குமார் (35) நேற்று காஞ்சிமரத்துறை பகுதியில் *முல்லைப் பெரியாற்றில் குளிக்கச் சென்ற போது திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனார் . இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் நேற்று முழுவதும் ஆற்றில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்* . ஆனால் நேற்று அவரது உடல் கிடைக்கவில்லை.  இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக தீவிரமாக மேற்கொண்ட தேடுதல் பணியின் போது முல்லைப் பெரியாற்றில் சதீஷ்குமார் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. .

Share this content:

Previous post

கிருஷ்ணகிரி பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் குப்பை , கோழி கழிவுகளால் நோய் தொற்று ஏற்படும் அபாயம்! அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

Next post

தேர்தலில் மக்கள் பலம்தான் வெல்லும்; பணபலம் ஒருபோதும் வெல்லாது: நயினார் நாகேந்திரன் உறுதி

Post Comment

You May Have Missed