துமகூரு நாகவள்ளி அரசுப் பள்ளி மேம்பாட்டுக்கு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் முன்னெடுப்பு..
கர்நாடக மாநிலம், துமகூரு கிராமப்புற தாலுகாவில் உள்ள நாகவள்ளி கர்நாடக அரசுப் பள்ளியில் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவை டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நடத்தியது. இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் வி. சோமண்ணா, துமகூரு சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடா மற்றும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் துணைத் தலைவர் ஏ. ரமேஷ் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 1,200-க்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயிலும் இந்தப் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள், தரமான மேசை, நாற்காலிகள், டிஜிட்டல் கற்றல் வசதிகள் மற்றும் செய்முறை கல்விக்கான உபகரணங்கள் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கு நவீனமான மற்றும் சிறந்த கற்றல் சூழல் உருவாக்கப்படும்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டாரின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவின் நாட்டுத் தலைவர் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் விக்ரம் குலாட்டி கூறுகையில், “ஒவ்வொரு குழந்தைக்கும் தன்னம்பிக்கை, ஆர்வம் மற்றும் உயர்ந்த இலக்குகளை வளர்க்கும் கல்விச் சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அரசுகள் மற்றும் உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து வலுவான கல்வி அமைப்புகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்,” என்றார்.



Post Comment