Loading Now

Breaking

கஞ்சா விற்பனையில் ஜரூர்கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்..

குன்னூரில் கடந்த சில நாட்களாக இளையோர்களிடம் கஞ்சா புழக்கம் அதிகளவில் காணப்படும் நிலையில் கஞ்சா வியாபாரிகளை கைது செய்வதும் அவர்கள் பிணையில் வந்து மீண்டும் அதே தொழிலை செய்வதும் வாடிக்கையகிவிட்டது இந்நிலையில் கடந்த வாரம் 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டு அடுத்தநாளே பிணையில் வந்தனர் இந்த நால்வரில் ஒருவர்மட்டும் வேறு வழக்கு சம்மந்தமாக மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் இதில் மாவட்ட கண்காணிப்பாளர் பிருந்தா அவர்களின் உத்தரவின் பேரில் குன்னூர் காவல் கண்காணிப்பாளர் ரவிக்குமார் மற்றும் அருவங்காடு காவல் கண்காணிப்பாளர் கவிதா ஆகியோரின் தலைமையிலான சிறப்பு குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் இதில் கரோலினா பகுதியை சேர்ந்த சந்தோஷ்(34) என்பவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர் பிணையில் வந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் அதே கஞ்சா வியாபாரம் செய்து கைதாகியுள்ளது போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது கைது செய்வதும் பிணையில் வருவதும் மீண்டும் அதே குற்றத்தை செய்வதும் வாடிக்கையாகிவிட்ட நிலையில் இவர்களைப்போன்ற சமுதாய சீரழிவை உண்டாக்கும் நபர்களின் மீது பிணையில் வெளிவரமுடியாத கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Share this content:

Post Comment

You May Have Missed