பிரவாஸ் 5.0-இல் அடுத்த தலைமுறைக்கான பயணிகள் போக்குவரத்து தீர்வுகளை காட்சிப்படுத்தும் Tata Motors, புதிய Ultra Prime மற்றும் Starbus Prime ரகங்களையும் அறிமுகப்படுத்துகிறது
இந்தியாவின் மிகப்பெரிய வணிக வாகன தயாரிப்பு நிறுவனமான Tata Motors, இன்று பிரவாஸ் 5.0 நிகழ்வில் தனது அதிநவீன வணிக ரீதியிலான பயணிகள் போக்குவரத்து தீர்வுகளின் தொகுப்பை காட்சிப்படுத்தியது. முற்றிலும் புதிய Tata Ultra Prime மற்றும் Tata Starbus Prime ரேஞ்ச் பஸ்களின் அறிமுகம் இதில் முக்கிய சிறப்பம்சமாக அமைந்தது. இந்நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த Tata Motors லிமிடெட்டின் வர்த்தக பயணிகள் வாகனப் பிரிவின் துணைத் தலைவரும் வணிகத் தலைவருமான ஆனந்த் S அவர்கள், “ஃபிளீட் ஆபரேட்டர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களுடன் தொடர்புகொள்வதற்கும், நாடு முழுவதும் பயணிகள் போக்குவரத்து தேவைகள் எவ்வாறு உருவாகி வருகின்றன என்பது பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கும் பிரவாஸ் ஒரு முக்கியமான தளமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு நாங்கள் காட்சிப்படுத்தியிருப்பது, ஊழியர்கள் போக்குவரத்து, சுற்றுலாப் பயணம், பள்ளிப் போக்குவரத்து அல்லது கடைசி மைல் இணைப்பு என அனைத்துப் பயன்பாடுகளிலும் வாடிக்கையாளர்களின் தேவைகளை நாங்கள் ஆழமாகப் புரிந்து வைத்துள்ளதை பிரதிபலிக்கிறது. என்று கூறினார்.



Post Comment