Loading Now

இஷின்ரியு கராத்தே பள்ளிகளை ஒருங்கிணைக்கும் தேசிய–சர்வதேச முயற்சி

image-3-1024x682 இஷின்ரியு கராத்தே பள்ளிகளை ஒருங்கிணைக்கும் தேசிய–சர்வதேச முயற்சி

யுனைடெட் இஸ்சின்ரியு கராத்தே-டூ பெடரேஷன், இந்தியா சார்பில், நாடு தழுவிய மற்றும் உலகளாவிய அளவில் இஷின்ரியு கராத்தே பள்ளிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றோம்.

புலன் உணர்வு வளர்ச்சி, உடல்–மன ஒழுக்கம், தற்காப்பு திறன் மேம்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களை ஒன்றிணைக்கும் இந்த அமைப்பு, இஷின்ரியு கராத்தே கலையை உலகளவில் பரப்பும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றோம்.

இந்த அமைப்பின் நிறுவனர் இணைக்கப்பட்ட இஷின்ரியு கராத்தே-டூவின் மூத்த குருவும், இந்திய ஸ்டைல் தலைவருமான கியோஷி டாக்டர் ஜே.பி. சிவபாலன், எம்.ஏ., அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் பெடரேஷன் செயல்பட்டு வருகிறது.

மேலும், இந்திய இயக்குநர் ஆலோசனைக் குழுவில் எம்.ஆர்.கே. சாந்த குமார், வீரகலை இதழ் சார்பில் உறுப்பினராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த முயற்சியின் மூலம் இளம் தலைமுறையினரிடம் வீரகலை கலாசாரம் வளர்க்கப்பட்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் இஷின்ரியு கராத்தே திறமைகள் முன்னெடுக்கப்படும் என பெடரேஷன் இந்திய ஸ்டைல் தலைவருமான கியோஷி டாக்டர் ஜே.பி. சிவபாலன், எம்.ஏ. தெரிவித்தார்.

Share this content:

Post Comment

You May Have Missed