Loading Now

தாராபுரத்தில் அதிமுக சார்பில் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சி.

image-1-1024x576 தாராபுரத்தில் அதிமுக சார்பில் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சி.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் மற்றும் நகர சிறுபான்மை பிரிவு, 5-வது மற்றும் 6-வது வார்டு அதிமுக கழகம் சார்பில் ரமலான் நோன்பு இப்தார் நிகழ்ச்சி தாராபுரம் ஹாஜியாநா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அவை தலைவர் டிடிகே காமராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் தாராபுரம் நகர செயலாளர் சி.ஆர். ராஜேந்திரன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச் செயலாளர் பங்க் மகேஷ் குமார், மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட கழக இணைச் செயலாளர் சத்தியபாமா, நகர கழக துணைச் செயலாளர் வி. நாட்ராயன், மாவட்ட இளைஞரணி பொருளாளர் பி.எஸ்.என்.எல். பூபதி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நாகராஜ், தாராபுரம் நகர பொருளாளர் சாமுவேல், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷபி பில்லா, 6-வது வார்டு செயலாளர் துல் பகாராலி 17 வார்டு செயலாளர் ரிஜ்வான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த இப்தார் நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர். நிகழ்ச்சி சமூக நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

Share this content:

Previous post

கொளத்தூர் தொகுதியில் ரூ.45 கோடியில் 9 திட்டப் பணிகள்: முதல்வர் திறந்து வைத்தார்

Next post

தமிழ்நாடு அன்னை இந்திரா காந்தி கிராம தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது,,,

Post Comment

You May Have Missed