Loading Now
மதுரையில் ‘விக்சஷித் பாரத் சங்கல்ப் அபியான்’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 300 மாணவர்கள் உறுதிமொழி

மதுரையில் ‘விக்சஷித் பாரத் சங்கல்ப் அபியான்’ போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 300 மாணவர்கள் உறுதிமொழி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ‘விக்சஷித் பாரத் சங்கல்ப் அபியான் – ஜென்சி போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி’ கல்லூரி பல்நோக்கு கூட்டரங்கில் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாமுவேல் செல்லையா மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மோ. பாண்டி ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அவர் தனது உரையில், 2047-ஆம் ஆண்டுக்குள் தன்னிறைவு பெற்ற வல்லரசு இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் பாடுபட வேண்டும்; போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் இந்திய தேசம் சார்பில் தேர்வு செய்யப்பட்ட 125 பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், மதுரை மாவட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பில் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு செய்யப்பட்டு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது.

கல்லூரி தாளாளர் திரு ஷா, செயலாளர் திருமதி ஷகீலா ஷா, தலைமை நிர்வாக அதிகாரி திரு ஆதம் முகமது மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சு. தபசு கண்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார் 300 மாணவர்கள் பங்கேற்று “போதை இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மோ. பாண்டி மற்றும் கல்லூரி முதல்வர் முனைவர் சு. தபசு கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு காணொளிகளை மாணவர்களுக்கு திரையிட்டு, போதையின் தீமைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் போ. முனியாண்டி மேற்கொண்டார். அவருடன் கணினி பொறியாளர் திரு உதயகதிரவன், பேராசிரியர்கள் பழனியம்மாள், ஆறுமுக ஜோதி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து சிறப்பாக செயல்பட்டனர்.

Share this content:

Previous post

செம்மஞ்சேரி அருகே குடிநீர் தட்டுப்பாடு: காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டம்

Next post

புதுச்சேரி அக்னிவீர் ஆட்சேர்ப்பு முகாம் தொடக்கம்: தகுதி ஓட்டத்தில் மயங்கிய இளைஞர் உயிரிழப்பு

You May Have Missed