Loading Now

2ஆவது ஒருநாள் போட்டி: 178 ரன்களில் சுருண்ட நமீபியா – 157 ரன்களில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்க அணி நமீபியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நமீபிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.

கானர் அதிரடி சதம்:

அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கானர் அதிரடியாக ஆடி 119 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு டோனி டி ஜோர்ஜி நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

2-ஆவது விக்கெட்டுக்கு கானர் உடன் இணைந்த டோனி ஜி ஜோர்ஜி அதிரடியாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இந்த ஜோடி 183 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோர்ஜி 79 ரன்னில் ஆட்டமிழந்தார்.

நமீபியா சார்பில் ஜேக் பிரேசல் 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது.

நமீபியா திணறல்:

கடின இலக்கை துரத்திய நமீபியா அணிக்கு மைக்கேல் வான் லின்ஜென் மற்றும் மாலன் க்ரூகர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.

தொடர்ந்து மூன்றாவது வீரராக களமிறங்கிய ஜான் ஃபிரைலின்க் ரன் எதும் எடுக்காமல் அவுட் ஆக நமீபியா அணி தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மிடில் ஆர்டரில் லௌரென் ஸ்டீன்கேம்ப் சற்றே நிதானமாக ஆடி ரன் குவிக்க தொடங்கினார். இவருடன் ஆடிய கேப்டன் கெர்ஹார்டு எராஸ்மஸ் தனது விக்கெட்டை பறிக்கொடுக்காமல் ரன் குவிப்பில் கவனம் செலுத்தினார்.

லௌரென் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஜான் பால்ட் 26 ரன்கள், ரூபென் டிரம்பெல்மேன் 30 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா வெற்றி:

கேப்டன் கெர்ஹார்டு 84 பந்துகளை எதிர்கொண்டு 68 ரன்களை குவித்தார். ஒருகட்டத்தில் நமீபிய அணி விக்கெட்டுகளை இழக்க 41.5 ஓவர்களில் வெறும் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் யான்சென் 4 விக்கெட்டுகளையும், ஈத்தன் போஷ் 3 விக்கெட்டுகளையும், மோகெனா மற்றும் ஜேசன் ஸ்மித் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற 13-ஆம் தேதி நடைபெறுகிறது.

Share this content:

Previous post

சீனாவை எதிர்கொள்ள இந்தியா இனி தேவையில்லை என்று அமெரிக்கா நினைக்கிறதா?

Next post

என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள் என்றால், பெருமையுடன் வெளியேறுவேன்!” – பிக் பாஸ் தமிழ் வீட்டில் முனியம்மாள் விடுக்கும் சவால்

You May Have Missed