Loading Now

“என்னை சிக்கலில் விடாதீர்கள்!”

சென்னை, செப்.05.

தமிழக முதல்வர் விஜய் தொலைநோக்கு சிந்தனையுடன் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டம் – ஒழுங்கு, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

தலைமைச் செயலகம் அமைப்பது காலத்தின் தேவை என்றும், புதிய அலுவலகம் கட்டுவதற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படுவது குறித்து அவர் விளக்கமளித்தார். மேலும், சட்டப்பேரவையில் எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் முதல்வர் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறாரா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எங்களைப் பொறுத்தவரை முதல்வர் விஜய் தெளிவாக உள்ளார். தமிழக மக்கள் விஜய்யை நம்பி வாக்களித்துள்ளனர். 2 ஆண்டுகளில் கட்சி தொடங்கி, 2 மாதங்களில் புதிய சின்னம் பெற்று, தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி சாதித்துள்ளார்” என்றார்.

மேலும், முதல்வர் மக்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்த செங்கோட்டையன், பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு “என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்” என நகைச்சுவையாக பதிலளித்தார்.

The post “என்னை சிக்கலில் விடாதீர்கள்!” appeared first on தின தமிழ்.

Share this content:

You May Have Missed