எலக்ட்ரோபதி மருத்துவ அங்கீகார கையெழுத்து இயக்க நிறைவு விழா
நவீன மூலிகை மருத்துவமாகிய எலக்ட்ரோபதி மருத்துவ அங்கீகாரத்திற்கான கையெழுத்து இயக்கமானது காருண்யா மருத்துவ கல்வி நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்டு தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பொதுமக்கள், மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் மே மாதம் தமிழகம் முழுவதும் இவ்வியக்கம் செயல்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து கையெழுத்துக்கள் பெறப்பட்டு ஐயப்பா மகளிர் கலை கல்லூரியில் வைத்து நடைபெற்ற நிறைவு விழாவில் கையெழுத்து படிவங்கள் கல்லூரி முதல்வர் தலைமையில், காருண்யா மருத்துவ கல்வி நிறுவனர் முன்னிலையில் பெறப்பட்டதுஇவ்விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு தொழில் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் குமரி மாவட்ட திட்ட மேலாளர் திரு ஆர் ராஜேஷ் தனது உரையில் இயற்கை சார்ந்த மருத்துவங்களை பாதுகாத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அரசின் மிக முக்கியமான கடமையாக உள்ளது ஆகவே தமிழக அரசு எலக்ட்ரோபதி மருத்துவத்தை அங்கீகரிக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து எலக்ட்ரோபதி மருத்துவர்களை பாதுகாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார் மேலும் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அஞ்சனா வி ஆர் தனது உரையில் எலக்ட்ரோபதி மருத்துவமானது இயற்கையானது மற்றும் பாதுகாப்பானது தினசரி உணவு பழக்கத்தில் உள்ள பல இயற்கையான உணவுப் பொருட்களை உள்ளடக்கி கட்டமைக்கப்பட்டுள்ள சிறப்பான மருத்துவமாக உள்ளதால் அரசு எலக்ட்ரோபதி மருத்துவத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார் காருண்யா கல்வி நிறுவனர் மருத்துவர் ரெ. ஜெஸ்டின்ராஜ் குறிப்பிடும் போது எலக்ட்ரோபதி மருத்துவத்தை அரசு அங்கீகரிப்பதன் மூலம் தரமான மருத்துவ சிகிச்சை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைப்பதற்கு வழிவகுக்கும் மேலும் தொற்றா நோய்களிலிருந்து சிறப்பான தீர்வை கண்டடையமுடியும் இதன் மூலம் இளையோர் வேலைவாய்ப்பு பெறுவதற்கு வழிவகுக்கும் ஆகவே இயற்கை சார்ந்த மருத்துவத்தை தமிழக அரசு உடனடியாக அங்கீகரித்து மக்கள் பயன்பாட்டு கொண்டுவர உரிய வரைவு அறிக்கை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார் இவ்விழாவில் பொதுமக்கள், எலக்ட்ரோபதி மருத்துவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.



Post Comment