Loading Now
தமிழகம் திருவள்ளூர் முகப்பு

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து, தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் காவல் துறையினர் இடையே ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் திருநங்கைகளால்ஏற்படும் தொல்லைகள், பாதுகாப்பான முறையில் தொழிற்சாலைகள் இயங்குவது,தொழிற்சாலைகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி சசிதர் ஆலோசனையின் பேரி்ல் நடைபெற்றது. நிகழ்விற்கு சிப்காட் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தலைவர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் எம்.சுரேஷ்பாபு, சிப்காட் திட்ட இயக்குனர் சரவணன் நித்தின், உதவி பொறியாளர் லட்சுமி நாராயணா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரேம் முன்னிலை வகித்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், ஷேர் பெண்கள் மற்றும் குழந்தைகளை அறக்கட்டளை தலைவர் மேரி ஆக்சீலியா ஆகியோர் பங்கேற்று பேசினர். நிகழ்வில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் பண்டிகை நாட்கள், தொழிற்சாலைகளில் நடைபெறும் விழாக்களின் போது திருநங்களை கூட்டமாக  தொழிற்சாலைகளுக்குள் நுழைந்து பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்களை தடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி திருநங்கைகள் நல வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து  முறையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது. அதே போல நிகழ்வில் பேசிய ஷேர் அறக்கட்டளை தலைவர் மேரி ஆக்சீலியா திருநங்கைகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க தொழிற்சாலை நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என ஆலோசனை கூறினார். தொடர்ந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில், உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் வெளி இடங்களில் தங்கி பணிபுரியும் சூழலில், அவர்கள் குறித்த விபரங்களை தொழிற்சாலைக நிர்வாகத்தினர் சேகரித்து வைக்க வேண்டும் என்றும், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் பலர் போலியான ஆதார் அட்டையை வைத்துள்ளது குறித்து தெரிந்தால் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் தொழிற்சாலை நிர்வாகத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. அவ்வாறே தொழிற்சாலைக்குள் தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் பணி புரியவும், அவர்கள் பணி செய்யும் போது பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் அணியவதை தொழிற்சாலை நிர்வாகத்தார் உறுதி செய்ய வேண்டும் என்று காவல் துறை சார்பில்கேட்டுக் கொள்ளப்பட்டது.