கொளத்தூர் அருணாச்சலம் தெருவில் கழிவுநீர் தேக்கம்!
நோய் பரவும் அபாயம் – நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அருணாச்சலம் தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
தேங்கியும், சாலையில் ஓடியும் வரும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் பெருகி நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாக நேரில் ஆய்வு செய்து, கழிவுநீர் அடைப்பைச் சரிசெய்து, சுகாதாரச் சீர்கேட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Post Comment