கோவை மரக்கடை சந்திப்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கோவை மரக்கடை சந்திப்பில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம், வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்துவதைத் தவிர்த்தல், கார்களில் இருக்கைப் பட்டை அணிதல் மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பி3 போக்குவரத்துப் பிரிவு சார்பில் திரு. எஸ்.எஸ். ஜெ. ரஞ்சன், W.S.S.I. ஜெயக்குமாரி மற்றும் PC 3190 அழகர்சாமி ஆகியோர் தலைமையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும், வாகன ஓட்டிகள் தங்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம் மற்றும் இருக்கைப் பட்டை அணிவதுடன், கைபேசி பயன்பாட்டைத் தவிர்த்து, சாலை விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பாதுகாப்பான பயணம்… நம் கையில்!
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள்:
- தலைக்கவசம் அணியுங்கள்!
- வாகனம் ஓட்டும்போது கைபேசி பயன்படுத்தாதீர்!
- இருக்கைப் பட்டை அணியுங்கள்!
- போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுங்கள்!
பாதுகாப்பான சாலை – பாதுகாப்பான எதிர்காலம்!



Post Comment