Loading Now

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில் ஸ்கேனிங் நடைமுறைக்கு எதிர்ப்பு – ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தம்!

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களின் அதிகபட்ச சில்லறை விலையுடன் கூடுதலாக ரூ.10 சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை வசூலிக்கும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் காலி மதுபாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது, ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட ரூ.10 மீண்டும் திருப்பி வழங்கப்படுகிறது.

இந்த நடைமுறையைச் செயல்படுத்த காலி மதுபாட்டில்களை ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்கேனிங் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், போதிய அளவில் ஸ்கேனிங் கருவிகள் வழங்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டியும் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை மற்றும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறும் பணிகளில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஊழியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed