பாகூர் தொகுதி எம்.எல்.ஏ இரா.செந்தில்குமாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் வாழ்த்து

R.செந்தில்குமார் அவர்கள் புதுச்சேரி மாநிலம் பாகூர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றதை முன்னிட்டு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பாகூர் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் மா. தாயப்பன் அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் புத்தகம் மற்றும் பேனா வழங்கி மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகளான மணபட்டு சுந்தரபாண்டியன், மேல்பரிக்கல்பட்டு பிரவீன், கீழ்பரிக்கல்பட்டு சபரிவாசன், குருவிநத்தம் சுனில் உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிகழ்வு பாகூர் தொகுதியில் அரசியல் நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.



Post Comment