Loading Now
×

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு வாகன ஓட்டுனர்களுக்கான கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் குமரா, மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம் முகாமில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட வாகன ஓட்டுனர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது,இதில் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இதில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், தனியார் மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Share this content:

You May Have Missed