தமிழ்நாடு புதுச்சேரி தேர்தலில் அதிக அளவில் வாக்களித்த வாக்காளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்ள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேட்டி
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் சென்னை வந்தார் சென்னை விமான நிலையத்தில் ஞானேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களுக்கும் வணக்கம், அண்மையில் தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள் பெருந்திரளாக வந்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். இதன் மூலம் அதிக அளவிலான வாக்குப்பதிவு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவாகி, வாக்குப்பதிவு சதவீதமும் உயர்ந்துள்ளதற்காக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வாக்காளர்கள் அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் உலகின் மிகப்பழமையான மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் தேர்தல் நடைமுறையை வெளிப்படைத்தன்மையுடனும் சிறப்பாகவும் நடத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் உறுதுணையாக இருந்தனர்.
குறிப்பாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தேர்தல் பணிகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் பணியைப் பாராட்ட உள்ளேன். ஜெய்ஹிந்த். இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் செயல்படும் தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET எனப்படும் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தேர்தல் தளம் மற்றும் தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் (ELC) தொடர்பான மாநில அளவில் மாநாடு சென்னை களைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. ஒருங்கிணைந்த டிஜிட்டல் தேர்தல் தளம் மற்றும் தேர்தல் எழுத்தறிவு மன்றங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்டு சென்றார். அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சார்ந்த தேர்தல் எழுத்தறிவு மன்றங்களுடன் கலந்துரையாடுகிறார்.



Post Comment