Loading Now
×

மக்காச்சோள செஸ் வரி நீக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும் என்ற எனது கோரிக்கையை, இன்று (28.01.2025) சாரண சாரணியர் இயக்க சர்வதேச நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்க திருச்சி வந்திருந்த மாண்புமிகு துணை முதல்வர், ஆருயிர் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் நேரில் வழங்கி, கோரிக்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். இந்த கோரிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், வேளாண்துறை அமைச்சருக்கும் அஞ்சலில் அனுப்பியுள்ளேன் என்ற தகவலையும் துணை முதல்வரிடம் தெரிவித்தேன். விவசாயப் பெருங்குடி மக்களுக்கான எனது இந்த கோரிக்கையின் நியாயத்தை புரிந்துகொண்டு அதனை விரைந்து நிறைவேற்றித் தர உதவிடுமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டேன்.

Share this content:

You May Have Missed