Loading Now
×

புது வண்ணாரப்பேட்டையில் கோலாகலமாக நடைபெற்ற ஓணம் விழா

சென்னை: புது வண்ணாரப்பேட்டை ஐயப்பன் கோயிலில் வடசென்னை மலையாளிகள் அசோசியேசன் சார்பில் 2026-ஆம் ஆண்டுக்கான ஓணம் விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பாரம்பரிய முறையில் அத்தப்பூ கோலம் அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான மலையாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

விழாவில் மகாபலி ராஜா வேடமணிந்தவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் ஓணம் வாழ்த்துகளை தெரிவித்தார். ஆண்டுக்கு ஒருமுறை தனது மக்களை சந்திக்க வரும் மகாபலி ராஜா, அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என வாழ்த்துவதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாரம்பரிய பொருட்கள் மற்றும் தமிழகத்தில் வசிக்கும் மலையாளிகள் பயன்படுத்தும் பல்வேறு பொருட்கள் விழா வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.

மகாபலி மன்னரை நினைவுகூரும் வகையில் மலையாள மக்கள் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையை பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், புது வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற இந்த ஓணம் விழாவில் மலையாள மக்கள் ஒன்று கூடி, பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடினர்.

Share this content:

Previous post

தின கனி காலை நாளிதழ் – உலகம் முழுவதும் வாசகர்களின் ஆதரவு

Next post

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ‘நைரா’வை அறிமுகப்படுத்துகிறது – இயற்கையான ரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் புதிய கலெக்சன்

1 comment

comments user
uUWdZJxCYgpLhOKdTlpu

USjuvrFQgdfTpCpoGiGv

You May Have Missed