ஊத்துக்கோட்டையில் மீண்டும் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு..! – கண்டும் காணாமலும் செல்லும் அதிகாரிகள் விபத்துகள் ஏற்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்படுமா..?
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் ஆயிரக்கணக்கான வணிக வளாகங்கள் மற்றும் சாலை ஓர கடைகள் உள்ள நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதுஇதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்று., வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை காவல் துறை அதிகாரிகள் இணைந்து சாலையை சீரமைத்தனர்,
இந்நிலையில் மீண்டும் கடைகளை அனைத்தும் சாலைகளுக்கு வந்துவிட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.,
குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாமல் வாகனங்கள் வரிசை கட்டி இருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்., குறிப்பாக ஆந்திராவில் இருந்து அதிகப்படியான மண் லாரிகள் ஊத்துக்கோட்டை வழியாக தமிழகத்திற்குள் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது..
இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் அதே போன்று பொதுமக்கள் பாதசாரிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்,
பெயரளவில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றி விட்டதாக கூறி அதிகாரிகள் சென்றுவிட்டதால் மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கடைகளை வைக்க ஆரம்பித்து விட்டனர்.,சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்துவது உள்ளிட்ட செயல்களில் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்., காவல் துறையும் கண்டும் காணாமலும் இருக்கும் நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எங்கு தான் இருக்கிறார்கள் என்பது தெரியாமல் உள்ளது, தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் சாலை உள்ளது என்றாலும் சாலையிலேயே வணிக வளாகங்கள் மற்றும் பெரிய பெரிய துணிக்கடைகள் பார்க்கிங் வசதி செய்துள்ளது., அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. யார் தான் பொறுப்பு யார்தான் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது பொதுமக்களில் கேள்வியாக உள்ளது..!!



Post Comment