மதுவிலக்கு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் விடுவது சம்மந்தமாக.

வருகிற 10.03.2026-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மதுவிலக்கு குற்றங்களில் சம்மந்தப்பட்டு கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட 26 வாகனங்கள் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. B.K.அர்விந்,IPS, அவர்கள் தலைமையிலும் மற்றும் குழுவினர் 1) கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையிடம், மதுரை மாவட்டம், மதுரை மாவட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு மதுரை மாவட்டம், 2) மண்டல துணை இயக்குனர், தானியங்கி பணிமனை,மதுரை மாவட்டம். 3) துணை ஆணையர், கலால், மதுரை மாவட்டம் ஆகியோர்கள் முன்னிலையில் பொது ஏலம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசுடமையாக்கப்பட்ட வாகனங்கள் ஏலத்திற்காக மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் ஏலதாரர்கள் மேற்படி வாகனங்களை பார்வையிட்டு முன்பணமாக இருசக்கர வாகனத்திற்கு ரூ: 5000/- வரும் 06.03.2026 மற்றும் 07.03.2026 ஆகிய தேதிகளில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலத்திலுள்ள மதுவிலக்கு அலுவலகத்தில் செலுத்தி ரசிது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்வோர் அரசு நிர்ணயித்த மதீப்பீட்டு தொகைக்கு அதிகமாக ஏலம் கேட்கவேண்டும்.

Post Comment