Loading Now
ராயக்கோட்டை அருகே அதிர்ச்சி: சட்டவிரோதமாக கருவில் உள்ள பாலினம் கண்டறிய முயன்ற கும்பல் மடக்கிப் பிடிப்பு!

ராயக்கோட்டை அருகே அதிர்ச்சி: சட்டவிரோதமாக கருவில் உள்ள பாலினம் கண்டறிய முயன்ற கும்பல் மடக்கிப் பிடிப்பு!

தின கனி செய்திகள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டையில், சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பாலினப் பரிசோதனை செய்ய முயன்ற நபர்களை சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர்.

ராயக்கோட்டை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட எம்.வி.எம் மண்டபம் பின்புறம் உள்ள கிராம சுகாதார செவிலியர் நாகராணி என்பவரது வீட்டில், நாகராணி உட்பட 4 கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக போச்சம்பள்ளி அருகே உள்ள கே.மோட்டூர் புளியம்பட்டியைச் சேர்ந்த எஸ்தர் என்ற நர்சிங் முடித்த பெண் என்பவரிடம் பேசி, பாலின பரிசோதனை செய்ய ரூ.50,000 பணம் தருவதாக ஒப்பந்தம் பேசி அழைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, எஸ்தர் மற்றும் திருப்பத்தூர் சிவராஜ்பேட்டையைச் சேர்ந்த குருமூர்த்தி ஆகிய இருவரும் போர்ட்டபிள் ஸ்கேனிங் இயந்திரத்துடன் ராயக்கோட்டையில் உள்ள குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு வந்துள்ளனர்.

இதுகுறித்து முன்கூட்டியே ரகசியத் தகவல் அறிந்த கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்த வீட்டில் மறைந்திருந்து கண்காணித்தனர். எஸ்தர் மற்றும் குருமூர்த்தி அங்கு வந்தபோது, மருத்துவக் குழுவினர் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து சிறைபிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து நான்கு செல்ஃபோன்கள் அவர்கள் பயன்படுத்திய ஸ்கேனிங் இயந்திரம் மற்றும் கார் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உடனடியாக இதுபற்றி ராயக்கோட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாலின பரிசோதனை செய்ய முயன்ற எஸ்தர், குருமூர்த்தி மற்றும் உடந்தையாக இருந்தவர்களைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை தலைமை மருத்துவ அலுவலர் (CMO) டாக்டர் கிரிஜா அளித்த புகாரின் பேரில், ராயக்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து சட்டவிரோத பாலின பரிசோதனை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

KGI HSR RKT IIIEGAL PRENATAL SEX TESTING GANG CAUGHT

Share this content:

You May Have Missed