திருப்பூர் கோல்டன் நகரில் ஊடக கனி நல சங்க கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் கோல்டன் நகரில் இன்று ஊடக கனி நல சங்க கூட்டம் மாநிலத் தலைவர் திரு. கனிராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட தலைவர் திரு. ராஜன் சுப்புராஜ் அவர்கள் அனைவரையும் உற்சாகமாக வரவேற்றார்.கூட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பித்து, மூன்று மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. சங்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் பல பத்திரிக்கையாளர்கள் இதில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மாத சந்தா பெறப்பட்டதுடன், பல முக்கிய விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன.இறுதியாக, திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு. லாரன்ஸ் நன்றி உரை வழங்கி, கலந்து கொண்ட அனைவரையும் வாழ்த்தி கூட்டத்தினை புன்னகையுடன் நிறைவு செய்தார்.



Post Comment