Loading Now
×

“குடும்பங்கள் கொண்டாடும் ‘குடும்பஸ்தன்’ படம்” – இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு

சென்னை: ‘குடும்பஸ்தன்’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து பாரட்டியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித், மேலும் இப்படத்தை ‘குடும்பங்கள் கொண்டாடும் படம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

‘குடும்பஸ்தன்’ படக்குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள இயக்குநர் பார்.ரஞ்சித், “என் அருமை தம்பி மணிகண்டன், இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி, குரு சோமசுந்தரம் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துகள். குடும்பங்கள் கொண்டாடும் படமாக குடும்பஸ்தன் உள்ளது. திரையரங்குகளில் அலை வீசுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நடிப்பில் ஜனவரி 24-ஆம் தேதி வெளிவந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றுள்ளது ‘குடும்பஸ்தன்’ திரைப்படம். குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வைசாக் இசையமைத்துள்ளார்.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் பணத்துக்காக படும் கஷ்டங்களை நகைச்சுவையுடன் கூடிய படமாக வழங்கியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி. இப்படம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வசூல் ரீதியில் லாபத்தை எட்டிவிட்டதாக சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.

Share this content:

You May Have Missed