Loading Now
×

J.M.J media இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கிண்ணியா குட்டியா குளம் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹிக்மத் இலவசக் கல்வி மையத்தில் இன்று இடம் பெற்ற பரிசளிப்பு,கௌரவிப்பு மற்றும் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது தி/ கிண்ணியா அல் அதான் மகாவித்தியாலய பழைய மாணவர்களால்(தரம் 9, 2005) நடாத்தி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் JMJ மீடியாவின் அனுசரணையுடன் இன்நிகழ்வுக்குறிய சான்றிதழ்கள் வழங்கப்கட்டதோடு J.M.J media இன் நிறுவனத்தின் பணிப்பாளர் ஜஸூரா ஜலீலின் தலைமையின் கீழ் நடைபெற்ற வாசிப்பு நிகழ்வு மற்றும் மரம் நடுதலுக்கான சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிண்ணியா வலயக்கல்வி ஆசிரிய ஆலோசகர் M.M . இபாதுள்ளா ஆசிரியர் மற்றும் நடுஊற்றுக் கிராமத்தின் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

Share this content:

You May Have Missed