Loading Now

பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி தொடர்பான விவசாயிகள் பயிற்சி

image-4-1024x543 பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி தொடர்பான விவசாயிகள் பயிற்சி

தென்காசி வேளாண்மை உதவி இயக்குநர் திரு.க.திருமலைச்சாமி தென்காசி அவர்களின் அறிவுறுத்தலின் படி செங்கோட்டை வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை கீழ் பாரம்பரிய நெல் இரகங்கள் சாகுபடி தொடர்பான உள் மாநில அளவிலான விவசாயிகள் பயிற்சி வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையம் திருப்பதிசாரம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வைத்து நடைபெற்றது மூன்று நாட்கள் பயிற்சியின் முதல் நாள் வேளாண்மை அறிவியல் நிலையம் திருப்பதிசாரம் உதவி பேராசிரியர் ஜோஷி அவர்கள் பாரம்பரிய நெல் ரகங்கள் சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார் இரண்டாம் நாள் வேளாண்மை ஆராய்ச்சி மையம் திருப்பதிசாரம் உதவி பேராசிரியர் பிரதீப் சம்பத்குமார் பாரம்பரிய இரகங்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் பற்றி விவசாயிகளிடம் தொழில்நுட்ப உரையாற்றினார்
பயிற்சி நிறைவு நாளில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்த விவசாயி வயல்களை பார்வையிட்டனர் இப்பயிற்சியில் செங்கோட்டை வட்டார விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர் வட்டார தொழில்நுட்ப மேலாளர் இசைப்பிரியா அவர்கள் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தார் பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சிவக்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் மாரிராஜ்,அன்பு செய்திருந்தனர்

Share this content:

Previous post

எட்-ஏ-மம்மா தனது முதல் கடையை சென்னையில் உள்ள வி. ஆர். சென்னை மாலில் திறக்கிறது ~ அதன் பூமிக்கு-சாதகமான தத்துவத்தை இந்தியாவின் முன்னணி சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றிற்கு கொண்டு வந்து , தெற்கில் அதன் இருப்பை வலுப்படுத்துகிறது,

Next post

சென்னையில் தனது தயாரிப்புகளின் தொகுப்பை விரிவுபடுத்தும் காஸ்மோ சன்ஷீல்ட்!

Post Comment

You May Have Missed