மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி,

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த், MLA அவர்கள், தமிழக அரசின் சார்பில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகிகள் நினைவிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு, தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (எ) பாஷ்யம் மற்றும் தியாகி செண்பகராமன் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மலர் அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி (ம) விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்கள், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள், மாண்புமிகு சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. எம். அருள் பிரகாசம் அவர்கள், மாண்புமிகு போளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர். அபிஷேக் அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு தியாகிகளுக்கு புகழஞ்சலி செலுத்தினர்.



Post Comment