திருவள்ளூர் எல்லைச் சோதனைச் சாவடியில் GPay மூலம் ₹300 லஞ்சமா?

வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டு – வீடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது
திருவள்ளூர், ஆக. 13: திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் வாகன ஓட்டிகளிடம் GPay மூலம் ரூ.300 லஞ்சம் கேட்டு பெறப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சோதனைச் சாவடியில் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொள்ளும் போது, விதிமுறைகளுக்கு மாறாக பணம் வசூலிக்கப்படுவதாக சில வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக, ரூ.300 தொகையை GPay மூலம் செலுத்துமாறு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பானதாகக் கூறப்படும் வீடியோ காட்சி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீடியோவில் இடம்பெறும் காட்சிகளின் உண்மைத் தன்மை மற்றும் பணம் பெற்றதாக கூறப்படும் நபரின் விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என லாரி டிரைவர்கள் கோரிக்கை எடுத்து வருகின்றனர்.
குற்றச்சாட்டு தொடர்பாக அதிகாரப்பூர்வ விசாரணை அல்லது நடவடிக்கை குறித்த தகவல் வெளியாகும் வரை, வீடியோவில் கூறப்படும் விவரங்கள் குற்றச்சாட்டாக மட்டுமே கருதப்பட வேண்டும்.
Post Comment