Loading Now

ஆண் நண்பருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியதால் இளம்பெண்ணை கொன்ற தந்தை, சகோதரர் கைது

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்​தில் மருத்துவமனை ஒன்​றில் வரவேற்​பாள​ராக பணிபுரிந்து வந்த சோபியா (22) 3 மாதங்​களுக்கு முன்​பு, ஆண் நண்பர் ஒரு​வருடன் இருக்​கும் வீடியோ ஒன்று சமூக வலை​தளங்​களில் வேகமாகபரவியது.

இதனால் தனது குடும்​பத்​தின் கவுர​வ​மும் மரி​யாதை​யும் சமூகத்தில் சீர்​குலைந்​து​விட்​ட​தாகக் கரு​திய சோபி​யா​வின் தந்தை முகமது பாரூக் மற்​றும் அவரது மூத்த சகோ​தரர் முகமது ஹாபில் ஆகிய இரு​வரும் சோபி​யா​வைக் கொலை செய்​யத் திட்டம் தீட்டி உள்​ளனர்.

இதன்​படி ஹாபில், கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு தனது ஆடைக்குள் இரும்​புச் சுத்​தி​யல் ஒன்றை மறைத்து வைத்​துக்​கொண்​டு, தந்​தை​யுடன் சேர்ந்து சோபி​யாவை இருசக்கர வாகனத்தில் வெளியே அழைத்​துச் சென்​றுள்​ளார்.

பயணத்​தின் வழி​யில் கேல்​ஜிபுரா கிராமத்​துக்கு அரு​கில் உள்ள தனிமை​யான மணல் பாதை​யில் இருசக்கர வாக​னத்​தைத் திருப்​பிய ஹாபில், அங்கு சோபி​யா​வின் தலை​யில் சுத்​தி​ய​லால் மூன்று முறை கொடூர​மாகத் தாக்​கிய​தில் அவர் ரத்த வெள்​ளத்​தில் சரிந்​தார்.

உடனடி​யாக சோபி​யா​வின் உடலை பிர​தான சாலைக்​குக் கொண்டு வந்து போட்​டதுடன், வேக​மாக வந்த வாக​னம் மோதியது போல் சித்​திரிக்க தங்​களது இருசக்கர வாக​னத்​தை​யும் அடித்து நொறுக்கி விபத்து நாடகத்தை அரங்​கேற்றி உள்ளனர்.

இதைத் தொடர்ந்து காவல் துறை​யினரைத் தொடர்பு கொண்ட அவர்​கள், தங்​களின் இருசக்கர வாக​னத்​தின் பின்​புறம் அடையாளம் தெரி​யாத வாக​னம் அதிவேகத்​தில் மோதி​ய​தில் தங்களுக்கு லேசான காயம் ஏற்​பட்​ட​தாக​வும் சோபியா பலத்த காயமடைந்​த​தாக​வும் கூறி​யுள்ளனர்.

சம்பவ இடத்​துக்கு வந்த காவலர்​கள் படு​காயமடைந்த சோபியாவை மீட்டு சோலா சிவில் மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்த நிலை​யில், சிகிச்சை பலனின்றி மறு​நாள் உயி​ரிழந்​தார். இதன்​பின் போலீஸார் நடத்​திய தீவிர விசா​ரணை​யில் உண்மை வெளிச்​சத்​துக்கு வந்தது. இதையடுத்து இளம்​பெண்​ணைக் கொன்று விபத்​தென நாடக மாடிய தந்​தை, சகோ​தரர் ஆகிய இருவரை​யும்​ போலீ​ஸார்​ கைது செய்​து சிறை​யில்​ அடைத்​தனர்​.

Share this content:

You May Have Missed