‘சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயன் தந்தையாக சீமான்?
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துவரும் ‘சேயோன்’ படத்தை சிவக்குமார் முருகேசன் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து உருவாக்கி வருகிறது.
மதுரை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் அதைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படப்பிடிப்பில் சீமான் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக சீமான் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.