Loading Now

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட காஷ்மீர் முதல்வர் உமர் ஆதரவு

ஸ்ரீநகர்: வந்தே மாதரம் பாடலை முழு​மை​யாகப் பாடு​வதற்கு ஜம்மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த விவ​காரத்​தில் தங்​களுக்கு எந்த உத்தரவையும் காங்​கிரஸ் கட்சி போட வேண்​டாம் என்​றும் தேசிய மாநாட்​டுக் கட்சி விமர்சித்​துள்​ளது.

ஜம்​மு-​காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த திங்​கள்​கிழமை நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் முதல்​வர் உமர் அப்​துல்​லா, தேசிய மாநாட்டுக் கட்​சித் தலைவர் பரூக் அப்​துல்லா உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். அப்​போது நிகழ்ச்​சி​யில் வந்தே மாதரம் முழு பாடல் பாடப்​பட்​டது. இரு மூத்த தலை​வர்​களின் ஆதர​வுடனேயே வந்தே மாதரம் முழு பாடல் பாடப்​பட்​டது.

இந்​நிலை​யில், வந்தே மாதரம் பாடல் பாடப்​பட்ட வீடியோவை சமூக வலை​தளத்​தில் பகிர்ந்த காங்​கிரஸ் மூத்த தலை​வரும், ஜம்மு-​காஷ்மீர் காங்​கிரஸ் கட்சி பொறுப்​பாள​ரு​மான கே.சி.வேணுகோ​பால், “வந்தே மாதரம் பாடலின் முழு வடிவத்தையும் பாட வேண்​டாம். அந்​தப் பாடலை குறுகிய வடிவத்தை மாபெரும் விடு​தலைப் போராட்ட வீரர்​கள் உரு​வாக்கி நமக்​குத் தந்​துள்​ளனர். எனவே, அவர்​களின் ஞானத்​தை​யும் தீர்ப்பை​யும் மதிக்க வேண்​டும். காங்​கிரஸ் கட்​சி​யின் நிலைப்பாட்டுடன் தேசிய மாநாட்​டுக் கட்சி இணைந்து நிற்க வேண்​டும்” என கூறி​யுள்​ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டு கட்​சி​யின் மூத்த தலை​வர் பஷீர் அகமது கூறும்​போது, “கூட்​ட​ணிக் கட்​சி​யாக இருக்​கும் காங்​கிரஸ், வந்தே மாதரம் பாடலை முழு​மை​யாக பாட வேண்​டுமா அல்​லது எவ்​வளவு பாட வேண்​டும் என்று எங்​கள் கட்​சிக்கு உத்​தர​விடத் தேவை​யில்​லை. கருத்​தைச் சொல்​வதற்கு காங்​கிரஸ் மூத்த தலைவர் வேணுகோ​பாலுக்கு உரிமை உள்​ளது. ஆனால், அதை கூட்​ட​ணிக் கட்​சிகள் மீது திணிக்க வேண்​டாம். இது மக்​களின் விருப்​பம்” என்றார்.

Share this content:

You May Have Missed