திருப்பூரில் அம்மன் ஆட்டோ புதிய கிளை திறப்பு விழா
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அசோக் லேலண்ட் மற்றும் அம்மன் ஆட்டோ நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
அம்மன் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு. சங்கர் அவர்களின் ஆணைக்கிணங்க, மகாராணி கல்லூரிக்கு எதிரில் புதிய பைபாஸ் சாலையில் இந்த கிளை துவங்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவிற்கு சுந்தரம் பைனான்ஸ் மேனேஜர் முரளி, சோழமண்டலம் கிளை மேலாளர் சதீஷ்குமார், அம்மன் ஆட்டோ நிறுவனத்தின் ஹெச்.ஆர். ரியாஸ் கான், மேனேஜர் செந்தில்குமார், மற்றும் கிளை மேலாளர்கள் பெரோஸ், ஜான் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதிய கிளை திறப்பின் மூலம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேலும் விரைவான வாகன சேவைகள் மற்றும் விற்பனை வசதிகள் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.



Post Comment