திமுக எம்.எல்.ஏ. காலமானார்: இடைத்தேர்தல் இல்லை
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. பொன்னுசாமி (74) மாரடைப்பால் நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அஞ்சலி செலுத்தினர். இதேபோல், வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைந்த நிலையில், சேந்தமங்கலம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்துள்ளது. பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு வராது.
Post Comment