Loading Now

முன்னாள் முதல்வர்கள் பட விவகாரத்தால் த.வெ.க. நிர்வாகிகள் முற்றுகை

குன்னூர் நகராட்சியில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் நகரமன்ற கூட்டம் நேற்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றது.கூட்டத்தில் குன்னூர் மார்க்கெட் இடிப்பு விவகாரம் குறித்து நகரமன்ற உறுப்பினர் ஜாகீர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மேலும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இடிப்பு பணிகள் டி.டி.சி.பி. (DTCP) அனுமதி பெறாமலேயே நடைபெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.இதனைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, கூட்ட அரங்கில் வைக்கப்பட்டிருந்த தற்போதைய முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்துடன், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என திமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதேபோல், அதிமுக உறுப்பினர்கள் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.இதனால் நகரமன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் முதல்வர் விஜய் அவர்களின் புகைப்படத்தின் இருபுறங்களிலும் முன்னாள் முதல்வர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.இந்த தகவல் அறிந்த த.வெ.க. நிர்வாகிகள் குன்னூர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நகராட்சி வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.பின்னர் நகராட்சி ஆணையாளர் தலையிட்டு, முன்னாள் முதல்வர்கள் மு.க. ஸ்டாலின் மற்றும் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்களை நகரமன்ற கூட்ட அரங்கிலிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து நிலைமை சீரடைந்தது.இந்த சம்பவம் குன்னூரில் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this content:

Post Comment

You May Have Missed