Loading Now
×

முன்னாள் மாணவர்களின் முயற்சியால் அழகானது அரசு பள்ளி

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்… பள்ளி மேலாண்மை குழுவின் முயற்சியால் பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்குச் செய்து வருகின்றனர்… அதன் அடிப்படையில் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களிடம் பள்ளியின் தேவை குறித்து கோரிக்கை வைக்கப்பட்டது… அக்கோரிகையின் அடிப்படையில் 1995-96 முன்னாள் மாணவர்கள் முயற்சியால் பள்ளி தலைமை ஆசிரியர் அனுமதியுடன் சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக முன்புற சுவற்றில் தேசத் தலைவர்களின் வரைபடமும் திருக்குறளும் எழுதப்பட்டது…. தேசத் தலைவர்களின் வரைபடத்தாலும் திருக்குறளாலும் அழகாக தோற்றமளிக்கிறது சதுரங்கப்பட்டினம் அரசு பள்ளி… முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளியின் தேவையை பூர்த்தி செய்தது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

1000283119-1024x768 முன்னாள் மாணவர்களின் முயற்சியால் அழகானது அரசு பள்ளி

Share this content:

Previous post

தினசரி 80 ஆயிரம் டன் முதல் 1 லட்சம் டன் வரை கனிமங்கள் கர்னாடகாவிற்கு சட்ட விரோதமாக கடத்தல்: தமிழக கனிம வளத் துறையில் ஊழல் களமிறங்குகிறது

Next post

மக்காச்சோள செஸ் வரி நீக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!

You May Have Missed