Loading Now

தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தில்லா மருத்துவத்தையும் இணைக்க வேண்டி முதலமைச்சரிடம் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு கோரிக்கை!!

IMG-20251214-WA0002 தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் மருந்தில்லா மருத்துவத்தையும் இணைக்க வேண்டி முதலமைச்சரிடம் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு கோரிக்கை!!

உலகின் பெரும்பாலான நாடுகளில் மாற்று மருத்துவத்தின் வகைப்பாடுகளில் இயற்கை முறை வைத்தியங்களான சித்தா, ஆயுர் வேதா, யுனானி, நேச்சுரோபதி, யோகா, தியானம் மற்றும் அக்குபிரஷர், அக்குபஞ்சர், ரெய்கி போன்றவற்றால் உடல் நலனைப் பேணவும், தங்களுக்கு ஏற்படும் நோய்களைக் குணப்படுத்திக் கொள்ளவும் மக்கள் | அதிகம் ஆர்வம் கொண்டு வருகிறார்கள். இந்த மாற்று மருத்துவத்தின் புதிய பரிணாமமாக, ‘மருந்தில்லா மருத்துவ சிகிச்சையான பஞ்சபூத மருத்துவ சிகிச்சை’யை பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு கண்டுபிடித்து இருக்கிறார். இவரது இந்தக் கண்டுபிடிப்பு, மாற்று மருத்துவ உலகின் மறுமலர்ச்சி எனலாம். தனது மருந்தில்லா மருத்துவ சிகிச்சைக்கான செயல்முறை காப்புரிமை மற்றும் வடிவமைப்பு காப்புரிமையை இந்திய அரசாங்கம் இவருக்கு வழங்கியுள்ளது. அத்துடன் உலக சாதனை சங்கமும் இவருடைய மருத்துவ மருந்தில்லா மருத்துவக் கண்டுபிடிப்புத்தான் முதல் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பு என அங்கீகரித்ததோடு, பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபுவுக்கு சாதனை சான்றிதழையும் விருதுகளையும் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.குண்டலினி தியானத்தின் வாயிலாக, தனது குருவான குருபிரான் ஞானபரஞ்ஜோதி அவர்களின் ஆசியோடு, பஞ்சபூத சிகிச்சையை, பஞ்ச பூத நாடிப் பரிசோதனை முறையில் நோய் அறிந்து அந்நோய்க்கு தீர்வளிக்கும் மருந்தில்லா மருத்துவ சிகிச்சை முறையை கண்டுபிடித்தார். பிறகு தான் கண்டுபிடித்த பஞ்சபூத சுழற்சி விதிமுறைகளை ஒரு பேப்பரில் எழுதிச் சென்று அவரது குருவான குருபிரான் ஞானபரஞ்ஜோதி அவர்களிடம் காண்பிக்க, குருவும் அந்த காகிதத்தில் உள்ள விசயங்களை விவரிக்க சொன்னார். அடுத்த நாள் குரு அவர்கள் இவரை அழைத்து, உனது கண்டுபிடிப்பை குரு,இறைவன் அங்கீகரித்துள்ளார் என்று ஆசிகள் வழங்கினார். சிறிது காலம் கழித்து பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு, தனது கண்டுபிடிப்பை பற்றி அவரது மானசீக குருவான சென்னையை சேர்ந்த டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மானிடம் விளக்கமாக விவரித்திருக்கிறார். அதனை கவனமாக உள்வாங்கிக் கொண்ட டாக்டர் ஃபஸ்லூர் ரஹ்மான், அவரது ஹெல்த் டைம் என்கிற புத்தகத்தில், ‘புதுப்புது ஞானங்கள்’ என்கிற தலைப்பில், ஓர் அத்தியாயம் முழுமையும் பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு பற்றியும் அவரது மருந்தில்லா மருத்துவக் கண்டுபிடிப்பு குறித்தும் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.காப்புரிமைகள், வடிவமைப்பு காப்புரிமைகள் மற்றும் பதிப்புரிமைகள், முத்திரையுரிமைகள்மற்றும் வெளியீடுகள்பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு, இந்தியா மற்றும் உலக அளவில்PCT என்னும் 158 நாடுகள் அடங்கிய சர்வதேச கூட்டமைப்பில் 2010 வருடம் பதிவு செய்தார். அந்த சர்வ தேச அமைப்பும் இவரது கண்டுபிடிப்பை ஏற்றுக் கொண்டது. பின்னர் ஆஸ்திரேலியா அரசாங்கத்தால் 2010ஆம் வருடமும், தென்ஆப்பிரிக்க அரசாங்கத்தால் 2012ஆம் வருடமும், இந்திய அரசாங்கத்தால் 2023ஆம் வருடத்திலும் அக்குபஞ்சர், அக்குபிரசர் மருத்துவத்தில் செயல்முறை காப்புரிமைகள் வழங்கப்பெற்றுள்ளார்.குண்டலினி தியானம் : 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் தியானத்தில், அவரது கண்டுபிடிப்பான “புனித வஜ்ர பிரம்ம ஞான மஹா குண்டலினி தியானம்” குறித்து நான்கு வெவ்வேறு விதமான வடிவமைப்பு காப்புரிமைகள் பெற்றுள்ளார். மேலும் அக்குபஞ்சர், அக்குபிரசரில் பஞ்சபூத சுழற்சி விதிகளைக் கண்டுபிடித்து, அதற்கான இந்திய அரசின் வடிவமைப்பு காப்புரிமை சான்றிதழை 2025ஆம் வருடம் பெற்றுள்ளார்.இவரது கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசிடம் இருந்து 34 பதிப்புரிமைகளும், அமெரிக்க அரசிடம் இருந்து 1 பதிப்புரிமையும் பெற்றுள்ளார். மேலும், இந்திய அரசின் 7 விதமான வர்த்தக முத்திரையுரிமைகள் பெற்றுள்ளார். தனது கண்டுபிடிப்பு குறித்து இவர் எழுதிய புத்தகங்கள் தமிழில், “நோய் அறி நலம் பெறு” 2015ஆம் வருடமும், ஆங்கிலத்தில்”Know Disease No Disease 2023 ஆம் வருடமும் வெளியிடப்பட்டன. இவையெல்லாம் அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை குறித்து ஏற்கெனவே உலகம் முழுவதும் உள்ள புத்தகங்களில் இல்லாத புதுமையான கண்டுபிடிப்பு சார்ந்த புதிய தகவல்களை இவற்றில் கொடுத்துள்ளார்.அக்குபஞ்சர், அக்குபிரஷர், ரெய்கி மற்றும் குண்டலினி தியானம் ஆகியவற்றில் சுமார் மூன்று தசாப்தங்களாக அனுபவம் பெற்றவரான பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு, சற்றொப்ப 30 ஆண்டுகளாக இத்துறையில் இயங்கி வருகிறார். கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 4,00,000 (நான்கு இலட்சம்) நோயாளிகளுக்கு மேல், மருந்தில்லா மருத்துவ சேவை செய்துள்ளதை முன்னிட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு 25 வருட வெள்ளி விழாவை, இவரது பஞ்சபூத மருத்துவம் & ஏ.ஜி.காஸ்மிக் கிளினிக் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அடைந்துள்ளது என்பதும், 25 வருட வெள்ளி விழாவின் நினைவாக வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் இவரது மருத்தில்லா பஞ்சபூத மருத்துவ சிகிச்சையின் சிறப்பு.முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை : இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அண்மையில் தலைமைச்செயலகத்தில், டாக்டர் ஆதி ஜோதி பாபு நேரில் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, அவரது மகன்கள் டாக்டர் ஜி.பி.விஜய், டாக்டர் ஜி.பி.அருண், நண்பர்களான திரைப்பட நடிகர் அஜய் ரத்தினம், மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.இச் சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், டாக்டர் ஆதி ஜோதி பாபு தனது மருந்தில்லா மருத்துவக் கண்டுபிடிப்பான பஞ்சபூத மருத்துவத்திற்காக இந்திய வரலாற்றில் முதல் முறையாக, இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட செயல்முறை காப்புரிமை சான்றிதழையும்,உலக சாதனை சங்கத்தால் வழங்கப்பட்டுள்ள உலக சாதனை சான்றிதழையும் காண்பித்து வாழ்த்து பெற்றார். மேலும், தனது கண்டுபிடிப்பு சம்பந்தமாக தமிழில், தான் எழுதிய “நோய் அறி – நலம் பெறு’ என்ற நூலையும், ஆங்கிலத்தில் தான் எழுதிய ‘KNOW DISEASE – NO DISEASE என்ற ஆங்கில நூலையும் முதலமைச்சரிடம் அளித்தார்.அப்போது, டாக்டர் ஆதி ஜோதி பாபு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ‘கிராமம் தோறும் இல்லம் தேடி மருத்துவம்’ என்ற தமிழக அரசின் திட்டத்தில் தனது மருத்தில்லா மருத்துவத்தையும் இணைக்க வேண்டி கோரிக்கை வைத்தார். கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ஆதிஜோதி பாபுவிடம், உடனடியாக சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு மா.சுப்ரமணியன் அவர்களை சென்று சந்தியுங்கள், நானும் அவரிடம் கூறுகிறேன்” என்று கூறி வாழ்த்தியுள்ளார்.பேராசிரியர் டாக்டர் ஆதி ஜோதி பாபு, இந்தியக் கண்டுபிடிப்பாளர், அக்குபஞ்சர் மற்றும் அக்குபிரசர் மருத்துவத் துறையில் இருந்து பஞ்சபூத சிகிச்சை என்னும் மருத்தில்லா மருத்துவ சிகிச்சை முறையைக் கண்டுபிடித்தவர். 30 ஆண்டுகளாக இந்தத் துறையில் வல்லுனர் ஆவார். இந்தியா மற்றும் சர்வ தேச அளவில் காப்புரிமை பெற்றவர் என்பதோடு, உலக சாதனையும் படைத்தவர். 38 ஆண்டுகளாக குண்டலினி தியானத்தில் அனுபவம் வாய்ந்தவராகவும், குண்டலினி தியானத்தில் புதிய பரிணாமங்களைக் கண்டுபிடித்து இந்திய அரசாங்கத்தால் வடிவமைப்பு காப்புரிமை வழங்கப்பெற்றுள்ளார். தமிழகத்தின் சேலத்தில் அமைந்துள்ள, “ஏ.ஜி. காஸ்மிக் கிளினிக் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்” என்ற நிறுவனத்தின் நிறுவனத் தலைவர். பேராசிரியர் மற்றும் தலைமை மருத்துவராக செயல்பட்டு வருகிறார்.

Share this content:

Previous post

ரூ.40 லட்சம் கொடுத்தால் ரூ.50 லட்சம் தருவதாக பைனான்சியரிடம் மோசடி: சென்னையில் 3 பேர் கைது

Next post

சென்னையில் ஹஜ் இல்லம்: இஸ்லாமியர்களின் நீண்ட நாள் கனவு நனவாகியது – முதலமைச்சருக்கு அபூபக்கர் நன்றி

Post Comment

You May Have Missed