கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம், தேசிய நிலவு தினம் உள்ளிட்ட ஐம்பெரும் தினங்கள் கடைப்பிடிப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம், கணித தோராய மாக்கள் தினம் (π), தேசிய ஒலிபரப்பு தினம், உலக மூளை தினம், தேசிய நிலவு தினம் உள்ளிட்ட ஐம்பெரும் தினம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய தலைவரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா பேசும் பொழுது தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளப்பட்ட தினம் ஒரு நாட்டுக்கு அடையாளமாக திகழ்வது அந்நாட்டின் தேசியக் கொடிதான். இந்திய தேசியக் கொடி என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஜூலை 22, 1947 அன்று ஏற்கப்பட்ட கொடியாகும். ஜனவரி 26, 1950-இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக இருந்து வருகிறது. இது மூவர்ணத்தை கொண்டது. தேசியக் கொடியை ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கய்யா வடிவமைத்தார். மூவர்ண தேசியக் கொடிக்கு 1947-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி இந்திய அரசின் அப்போதைய ஆங்கிலேயே நிர்வாக சபை ஒப்புதல் வழங்கியது. அந்தக் கொடியே 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15 சுதந்திர தினத்தன்று ஏற்றப்பட்டது உலக மூளை தினம் மூளையின் ஆரோக்கியம், நரம்பியல் கோளாறுகள் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது. கணித பை தோராய நாள் (Pi Approximation Day) கணிதத்தில் பயன்படும் π (Pi) என்ற கணித மாறிலியின் மதிப்பான 22/7 என்ற வடிவைக் குறிக்கும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது. தேசிய நிலவு தினம் தேசிய அல்லது சர்வதேச நிலவு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 20 அன்று கொண்டாடப்படுகிறது. இது மனிதன் முதன்முதலில் நிலவில் கால் பதித்த நாளாகும். 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் பஸ் ஆல்ட்ரின் நிலவில் இறங்கினர். 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. விண்வெளி ஆராய்ச்சியில் உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்துவதும், நிலவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும் என்று பேசினார்.



Post Comment