Loading Now

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்!

மேல அம்மா சத்திரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா, மேல அம்மா சத்திரம் கிராமத்தில் குலதெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடத்துவது தொடர்பான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ பராபவ வருடம், ஐப்பசி மாதம் 15ஆம் தேதியான 01.11.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், இந்து எழுச்சி பேரவையின் மாநிலச் செயலாளர் ஜெய ஸ்ரீ தேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மேல அம்மா சத்திரம் கிராமவாசிகள் மற்றும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் நற்பணி மன்றத்தினர் என 200-க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் திருக்கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தைச் சிறப்பாக நடத்துவதற்கான திருப்பணிகள், விழா ஏற்பாடுகள், நிதி திரட்டுதல், பக்தர்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

மேலும், கிராமத்தின் ஊர் பெரியோர்கள், கிராமவாசிகள், நகரவாசிகள், திருக்கோயிலின் குலதெய்வ வழிபாட்டாளர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தங்களது ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்கினர்.

அன்னையின் மகா கும்பாபிஷேக விழாவை அனைவரது ஒத்துழைப்புடன் சிறப்பாகவும், சீரும் சிறப்புமாகவும் நடத்துவது எனக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

செய்தியாளர்: அன்புரகோத், மயிலாடுதுறை.

Share this content:

Post Comment

You May Have Missed