விடுதிகள் வணிக கட்டிடங்கள் அல்ல என்ற தீர்ப்பு – ஏழை மாணவர்களின் வாழ்வில் வசந்தம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 25,000 விடுதிகளுக்கும், அதில் தங்கி பணிபுரியும் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்து இளைஞர்களுக்கும் பெரும் நிம்மதி அளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதி அரசர் மேதகு கிருஷ்ணன் ராமசாமி ஐயா அவர்களுக்கு விடுதி நிர்வாகிகள் சங்கம் மற்றும் பெற்றோர்கள் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.காலைப் பணிக்குச் சென்று மாலையில் விடுதிக்குத் திரும்பி அடிப்படை தேவைகளுக்காக மட்டும் மின்சாரத்தையும் குடிநீரையும் பயன்படுத்தும் உண்மையை உணர்ந்து, அவை வணிக வரியாக இல்லாமல் இல்லங்களுக்கான வரியாக மாற்றிய நீதியரசர் மேதகு கிருஷ்ணன் ராமசாமி அவர்களை சங்கம் வணங்கி போற்றியுள்ளது.பெரும் நிறுவனங்களில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் ஆடம்பர பங்களாக்களில் மின்சாரம் பயன்படுத்தும் நிலைக்கு இணையாக, மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் பணிபுரியும் எளிய குடும்பத்து மாணவர்கள் விடுதிகளில் அடிப்படைத் தேவைகளுக்காக பயன்படுத்தும் மின்சாரத்திற்கும் வணிக கட்டணமாக இருந்தது. இத்தீர்ப்பின் மூலம் அது இல்லங்களுக்கான மின் கட்டணமாக மாற்றப்பட்டுள்ளதுடன், இளைஞர்கள் மாதத்திற்கு சராசரியாக ரூ.8,000 முதல் 10,000 வரை சேமிக்கும் வழியும் உருவாகியுள்ளது.“எளிமை ஆளுமை” என்ற திட்டத்தின் மூலம் விடுதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும், அப்போதுதான் இளைய பாரதம் முன்னேற முடியும் என்று கூறிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் சங்கம் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளது.மேலும், தமிழ்நாடு முழுவதும் கலாச்சாரம், பண்பாடு, குடும்ப உறவு முறைகளுக்கு எதிராக வளர்ந்து வரும் “கோ-லிவ்” எனப்படும் இருபாலர் தங்கும் விடுதிகளைத் தடை செய்ய நீதிமன்றமும் அரசாங்கமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.அதேபோல், சிறு விடுதிகளில் குறைந்தபட்ச மாணவர்களை வைத்துக்கொண்டு உணவு செய்து சேவை செய்து வரும் முதியோர், வாழ்வாதாரம் இழந்தோர் மற்றும் திருநங்கைகள் போன்றோருக்கு அரசு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு வழங்க வேண்டும் என்றும் பணிவுடன் கோரப்பட்டுள்ளது.



Post Comment